கவிதை உலா வரும் மேடை

பூங்கா பூக்களின் மேடை
தென்றலுக்கு தோட்டம் மேடை
காதலுக்கு கண்கள் மேடை
கவிதைக்கு கற்பனை மேடை
புன்னகைக்கு இதழ்கள் மேடை
புத்தத்திற்கு இதயம் மேடை
இதயம் நினைவுகளின் மேடை
நினைவுகள் கவிதை உலா வரும் மேடை !
நிகழும் ஜெய ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாள்
திரு வளர்ச் செல்வன் பழனி அமுத குமாரின்
கவிதை உலா வரும் நன் மேடை !
----கவின் சாரலன்
கவிக் குறிப்பு : இதுவும் பழனி குமாருக்கே ..சொல்லவும் வேண்டுமோ ?