அரங்கேறினால்
மலர்கள் பூக்கூடை அரங்கேறி
விற்பனைக்கு விளம்பரம் செய்தால்
அது மலர்ச் சந்தை !
மலர்கள் அழகிய மாலைகளாகி
இரு அன்புள்ளங்களின் தோள் சேர்ந்தால்
அது மணமேடை !
கவிதை மலர்கள் புத்தகமாகி
அரங்கேறி அழகாய் விரிந்தால்
அது கவி மேடை !
கையில் விரிந்த கவிதை மலர்கள்
மன அரங்கேறி நினைவுகளில் நிலைபெற்றால்
அது கவிஞனின் புகழ்மேடை !
----கவின் சாரலன்
கவிக் குறிப்பு : என் இனிய கவி நண்பர் பழனி குமாரின் அக்டோபர்
--திங்கள் 12 ஆம் நாள் கவிதைப் புத்தக வெளியீட்டிற்காக.....