நிலாச்சோறு

சீரியலோடு சிநேகிதம்
கொண்ட அம்மா
ஆபீஸ் பணியில்
அடைக்கலமான அப்பா
ஆண்டு தேர்வுக்கு மிரண்டு
படிக்கும் அண்ணன்
நடிகையோடு ஒப்பிட்டு
பார்க்கும் அக்கா
அன்பென்ற நிலவின்
ஒளியின்றி
அம்மாவாசையான அக்-
குடும்பத்தில் நிலாசோற்றுக்கு
அழுதபடி குழந்தை...........

எழுதியவர் : farmija (9-Sep-14, 2:48 pm)
பார்வை : 179

மேலே