என்னோடு நீ -2

மேடையில் நடுக்கத்துடன்..
சேர்ந்தே அரங்கேறிடும்..
பதட்டமா நீ...!

மழையில் நனைந்த..
சிட்டு குருவியின்..
சிலிர்ப்பா நீ...!

படிகளில் ஏறிட..
வரும் பெரும்..
மூச்சா நீ...!

குளிக்கையில் நீரின்..
சலசலப்பில் குரலுயர்த்தும்..
பாடலா நீ...!

இனிப்பிலும் சுவை..
சேர்க்கும் ஒருசிட்டிகை..
உப்பா நீ...!

ஒரு கண்ணில்..
மட்டும் விழுந்த..
தூசியா நீ...!

நடக்கையில் பாதங்களில்...
ஒட்டிக் கொள்ளும்..
மண்துகளா நீ...!

பெரும் துக்கத்திலும்..
எட்டிபார்க்கும் சின்ன
சிரிப்பா நீ...!

ஓட்டத்தின் முடிவில்..
அதிகரிக்கும் இதய..
துடிப்பா நீ...!

நடமாட்டமில்லா காட்டில்..
பூத்த ஒற்றை..
மலரா நீ...!

தூக்கத்தில் புரண்டு..
படுக்க வைக்கும்..
சத்தமா நீ...!

சாதனைகளிலும் சோதனைகளிலும்..
தன்னையறியாது வரும்..
கண்ணீரா நீ...!

கவிக்கு மேலும்..
அழகு சேர்க்கும்..
பொய்களா நீ...!

மிரட்டி துரத்திவிடும்..
அழகான சோலைகாட்டு...
பொம்மையா நீ...!

எழுதியவர் : மணிமேகலை (9-Sep-14, 8:09 pm)
பார்வை : 296

மேலே