பட்டப்பெயர்

உனக்குப்பிடிக்காததால் எனக்கு நீ,
செல்லப்பெயர் வைத்து அழைப்பதில்லை !
அதே உனக்குப்பிடிக்காது என்பதாலேயே,
நானும் அப்படிப்பெயர்களில் அழைப்பதில்லை !
என்றாலும் நின்றுவிடுமா மேகங்கள் நகராமல்?
அங்கே உனக்கும் எனக்குமான ஒரு அரூப உலகத்தில் !
நித்தநித்தமும் உனக்கொரு பெயர்வைத்து,
கொண்டாடி கூத்தாடுகிறேன் !
பிற்பாடு நிஜத்தில் விழுந்து திண்டாடி கதறி அழுகிறேன் !
எங்கே என் சுதந்திரங்கள் புதைந்ததென அறியாமல் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (9-Sep-14, 8:10 pm)
Tanglish : pattappeyar
பார்வை : 96

மேலே