மானிடம்

குருவி கூட உந்தன் செயல்
குந்தகம் என கருதிற்று
அதனாலே தன் கூண்டையும்
அதி உச்சியில் கட்டிற்று.....!

அருவி கூட அமைதி கொண்டு
அசையும் ஆற்றை இழந்திட்டால்
அதையும் கூட அழித்திடுவான்
என்ற அறிவை பெற்றிற்று...!

உருவி உருவி உலகையே
உருக்குலைக்கும் மானிடா
உணர்ச்சி பொங்கி உன்னை அன்று
உலுக்கியது ஓர் சுனாமி...!

துருவி துருவி உலகெல்லாம்
துவம்சம் செய்யும் மானிடா
துட்டு தான் வாழ்வென்று
துள்ளுகிறாய் நீ இன்று....!

கருவி கொண்டு இயற்கையை
களங்கம் செய்யும் மானிடா
எண்ணி பார் ஒரு கணம்- இன்று
கூர்ப்பின் எக்கட்டத்தில் நீ என....!

எழுதியவர் : (9-Sep-14, 8:06 pm)
பார்வை : 110

மேலே