தமிழ் வளர்த்து என்ன செய்ய போகிறோம்

ஆதியிலே
கடவுள் இல்லை,மதமும் இல்லை.!
இந்து இல்லை.
இஸ்லாம் இல்லை.
இயேசு துதிக்கும்
கிருத்துவம் இல்லை.

இருந்தது எதுவெனில் ...
உருவில்
மிராண்டியாய்,
உணர்வில் மிருகமாய்,
தனித்தனியாய்...
திட்டுத்திட்டாய்...
வானரத்தின் வழிவந்த
ஓர் இனமே.!!

அவ்வினம் ....
இரையின் பொருட்டோ
இயற்கையின் பொருட்டோ,
எதிர்மிருகம் பொருட்டோ
எல்லாம் பொருட்டோ !

கூட்டமாய் சேர்ந்தது.!
கூடி இருந்த்தது.!
கூடியிருக்கப் புரிதல் வேண்ட
குறிப்பு சொன்னது
சைகைகளினால்...
குரல் கொடுத்தது
சப்தங்களினால்...

சப்தங்கள் சொல் ஆக,
சொல் தொடராக,
தொடர் திருத்தம் ஆக,
திருத்தங்கள் மொழியானது.!!

அம்மொழியே
அவ்வினத்துக்கு
துணை தந்தது .தொழில் தந்தது.!
ஊன் தந்தது .உறக்கம் தந்தது.!!
இடம் தந்தது .எல்லாம் தந்தது.!!!

எஞ்சிய இனமெல்லாம்
அஃறிணை ஆனது !
அது மாத்திரம்
உயர்திணை என்ற
மனிதனானது.!

மனிதன் ஆனபின்....
நாகரிகம் வந்தது.!
நற்பண்பாடு வந்தது.!!
கலாச்சாரம் வந்தது.!
கருத்துக்கள் வந்தது.!!
கருத்துக்கள் தந்தவையே
கடவுளும் மதமும்.

ஆகையால் சொல்கிறேன்
ஆறறிவு மக்களே!
மொழிதான் முதன்மை.
மொழியே முதன்மை.
மொழியின் பொருட்டே
மாந்தரின் மகத்துவம்.

மொழி வளர்ப்பின் நாம் வளர்வோம்.
மொழி அழிப்பின் நாம் அழிவோம்.!

-
பி . கு :ஏற்கனவே பதித்ததுதான்
பாரதி நினைவு நாளுக்காக மறுபதிவு

எழுதியவர் : ராம்வ்சந்த் (10-Sep-14, 6:28 pm)
பார்வை : 194

மேலே