+தமிழினிது தமிழினிது தமிழினிது நண்பா+

தமிழினிது தமிழினிது தமிழினிது நண்பா!
தமிழளிக்கும் கவியினிது தவறெனிற்சொல் நண்பா!
தமிழினிமை தேனினிமை அமிழ்தைவிட நண்பா!
தமிழளித்த பாரதியின் புலமையுச்சம் நண்பா!

தமிழ்படித்து தமிழ்குடித்து தமிழ்படைப்போம் நண்பா!
தமிழ்பிடித்த தமிழரெல்லாம் இணைந்திருப்போம் நண்பா!
தமிழ்கடலில் முத்தெடுக்க மூழ்கிடுவோம் நண்பா!
தமிழ்முத்தை தரணியெல்லாம் ஒளிரச்செய்வோம் நண்பா!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (10-Sep-14, 8:16 pm)
பார்வை : 181

சிறந்த கவிதைகள்

மேலே