மறையட்டும் மனிதகாப்பிடம்
வாயூறு கொண்டே ஓரினம்,
மனித வர்ணம் கலைத்திட்டே,
குறிபில்லா காவு தனை,
அலறிக் கூடைதனில் அரங்கேற்றி,
தன் வேட்கை தீர்த்ததை,
கண்டும் கலங்கிடா மனிதகாப்பிடம்!
ஊண் பசியறியா உத்தமர்(?),
தீரா பசியாம் காமம்தனை,
கரைத்தொட-கயவர் சிலர் ,
கடைதனிலே விற்றிட்ட கலைமகளின்,
கண்ணீர்சுரப்பிகள் தீர்த்த கண்ணீரை,
கண்டும் கலங்கிடா மனிதகாப்பிடம்!
இன்றே புதையுண்டு அழியட்டும்!
மனிதம்,
பாதைப்புள்ளி எல்லாம் புதைக்குழியாய் மாறியே!
ஓசையின்றி கடையொரு ஒப்பாரி பாடியே!
முடியட்டும் முனைப்பில்லா இவ்வுலகம்!
பெருமுர்ச்சை அடைந்தே,
மனித உறக்கதினுள்!
விடியல்-விடை சொல்லட்டும்,
பெண்ணியம் புரட்சியினால்!