அன்பு

அள்ள அள்ள குறையாது
அச்சம் என்பது அறியாது
இச்சகத்து மானிடர் மேல்
அன்பு கொண்டு வாழ்வதே மேல் !

தவிடு பொடி ஆகிடுமே
துர்க் குணங்கள் யாவையுமே
பிறிதொருவர் மீது காட்டும்
அன்பு ஒன்றே உவகை கூட்டும்!

கள்ளமில்லா நெஞ்சை மட்டும்
கை வசமே வைத்திருப்போம்
உள்ளமதில் அன்பு இல்லா
வறிய நிலை நீக்கிடுவோம்!

பகைவனுக்கும் அன்பு செய்வோம்
பகையொழிந்து போகக் காண்போம்
நிலையிலாத உலகில் என்றும்
நிலைத்து நிற்க அன்பு கொள்வோம்!

எழுதியவர் : karuna (12-Sep-14, 10:56 am)
Tanglish : anbu
பார்வை : 91

மேலே