ந க துறைவன் சிறுவர் பாடல்

பஞ்சவர்ண கிளி….!!
*
கிளியக்கா கிளியக்கா
இலை நிறம் கிளியக்கா
சிறகை விரித்து பறந்து
எங்கே போறே கிளியக்கா !.
*
கோவைப் பழம் தின்னியா?
சிவந்த உதடு கிளியக்கா
எனக்கு ஒரு முத்தம் தா
ஆசைக் கொஞ்சி கிளியக்கா !.
*
பஞ்ச வர்ண கிளியக்கா
பாச முள்ள கிளியக்கா
பேசிப் பேசிப் பழகிடவே
பறந்து வா கிளியக்கா !.
*
மரம் நிழலில் அமர்ந்து
ஒய்வெடுக்கும் கிளியக்கா
நேரம் கிடைக்கும் போது
வீட்டுப் பக்கம் வா கிளியக்கா !.
*
அன்னை மீனாட்சி தோளில்
அழகு செய்யும் கிளியக்கா
அன்பாக என்னோடு பேசி
விளையாட வா கிளியக்கா…!!.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (12-Sep-14, 10:20 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 137

மேலே