என் வரிகளில் - நீ ஒரு காதல் சங்கீதம் நாயகன்

காதலி நீயே என் புதுவேதம்
காதலி நீயே என் புதுவேதம்
நால்வகை மீதம் அதில் பேதம் ....

காதலி நீயே என் புதுவேதம்
நால்வகை மீதம் அதில் பேதம்
காதலி நீயே என் புதுவேதம்

நேரெதிர்காணா சோடிகள் ஒன்று
கோடிஎண் காதல் கூட்டிடுது

வாழ்க்கையின் சாரம் காதலே என்று
வாழ்ந்து தான் உலகிற்கு காட்டிடுது

இன்பத்தில் நாட்கள் ......
இன்பத்தில் நாட்கள் சிறக்கிறது
துன்பத்தை வேரோடு வெறுக்கிறது

உலகத்தில் வாழும் அனைத்துயிர்க்கும் சேர்த்து
இருவரே காதல் புரிவோமே

உலகம் முழுதும் சுகித்திருக்க ...

காதலி நீயே என் புதுவேதம்
நால்வகை மீதம் அதில் பேதம் ....

காதலி நீயே என் புதுவேதம்
நால்வகை மீதம் அதில் பேதம் ....

நீரினை சேரா வேரடி நானும்
காதலை தூறலாய் தூருகிறாய்

துன்பத்தை தவிர்த்து வேறிலாயென் வாழ்வில்
இன்பத்தேன் ஊற்றாய் ஊருகிறாய் ...

உலகத்து துன்பங்களே ..
உலகத்து துன்பங்களே நின்றுவிடு
என் தேவியை இன்பமாய் வாழவிடு

இருவரின் காதல் பெருக்கினை பார்த்து
கடல் மகள் நீயும் கருகாதே ..

உயிர்வரை காதலும் தொடரட்டுமே ....

காதலி நீயே என் புதுவேதம்
நால்வகை மீதம் அதில் பேதம் ....

எழுதியவர் : ஆசை அஜீத் (13-Sep-14, 5:45 pm)
பார்வை : 206

மேலே