மனசோடு ஒரு போராட்டம்
... மனசோடு ஒரு போராட்டம் ""...
நேசமும் பாசமுமாய் இருந்த
அன்பின் ஆட்சி காலத்தில்
எல்லையில்லா மகிழ்ச்சியின்
எல்லையைதாண்டிய ஆனந்தம்
வாழ்வு வழித்தடத்தில் ஊடலும்
கூடலும் காதலின் நியதி
தீண்ட பார்த்து தீண்டி பார்க்க
சீண்டலின் சிறு சிருங்காரம்
பெரும் இடிமழைக்குப்பின்
நிசப்த்தமான அமைதியாய்
எல்லாம் முடிந்து இடம்விட்டு
இணையா இரு கோடுகளாய்
வேறுபட்ட பாதைகளில்
பாதங்கள் தன் தடம் பதிக்க
மறக்க முடியாத நினைவுகள்
நம்மை மீண்டும் மீண்டும்
முட்டும்போது ஏனோ கண்கள்
அனுமதியின்றி அணையுடைகிறது
இதில் மனம் மட்டும் ஏனோ
இருதலை கொள்ளியாய்
நினைவுகளை வெறுக்க
முடியாமலும் நிகழ்வுகளை
மறக்கமுடியாமலும் நித்தமும்
மரணத்துடான போராட்டமாய்
போட்டியிட்டு போட்டியிட்டு
சோர்ந்து தளர்ந்துவிடுகின்றது,,,
என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...