மீண்டும்
மெல்லிய
இருளின் இடையில்..
மெழுகு இழை
ஒளியில்..
எதிர் எதிர்
இருக்கையில்..
நீ..
உன் கணவனுடன்..
நான்
என் மனைவியுடன்..
கையில் சூடான
தேநீர்..
இதழுடன் சேர்ந்து
இரு இதயதிலும் பரவும்
இதமான சூடு..
பருகும் போதே
பார்வைகளின்
மௌனப் பரிமாற்றம்..
சில நிமிட பேச்சு..
மிண்டும்..
அதே தவிர்க்க முடியா
பிரிவு..
கிடைக்குமா..?
என்றாவது ஒரு நாள்..