உன் விழி

காதல் என்பதோர்
காரிருள்...

உன் விழி மட்டுமே
அங்கு ஒளிதரும்
சூரியன்...

இருளினுள்
ஒரு ஏதன் தோட்டம்..

அருவிகள்..
அங்கே கவிபாடும் குருவிகள்..

வட்டமாய் வளர்ந்திடும்
நீரலைகள்..
மையமாய் மலர்திட்ட தாமரைகள்..

மாமரங்கள்..
மலர் வனங்கள்..
மயில் இனங்கள்..

எல்லாவற்றுக்கும் மேலாய்
அனைத்திலும்
உன் சாயல்...

எனக்கெனவே படைக்கப்பட்ட
தனிச் சொர்க்கம்..

ஒருவேளை..
உன் விழி நகர்ந்தால்..
ஒளி மறைந்தால்..

காரிருளினில் கைதியாகும்
என் சொர்க்கம்...

இருளில் தள்ளாடி..
கால்கள் தடுமாறி..

என் இதயம் விழுந்து
இரண்டாய் பிளக்கும்...

ஏனோ கண்கள்
இரத்தம் வடிக்கும்..

அந்த தனிமையிலும்
உன்னை வேண்டியே

மனம்
தவம் இருக்கும்..

ஒளிதரும் சூரியனே..
விழி விளக்கிக் கொள்ளாதே..

நீ விழகி சென்று விட்டாள்
என் உயிர் நில்லாதே..

எழுதியவர் : இரா.இரஞ்சித் (14-Sep-14, 10:43 am)
Tanglish : un vayili
பார்வை : 2562

மேலே