நடுக்கற்ற காட்சியார் நோக்கார் - ஆசாரக் கோவை 99

உரற்களத்து மட்டிலும் பெண்டிர்கள் மேலும்
நடுக்கற்ற காட்சியார் நோக்கார் எடுத்திசையார்
இல்லம் புகாஅர் விடல். 99 ஆசாரக் கோவை

பொருளுரை:

சோர்வற்ற அறிவுடையவர் ஆரவாரம் நடைபெறும் இடத்தில் இருந்து
வேடிக்கை பார்க்க மாட்டார்.

மடைப்பள்ளியிலும் ஆலோசனைகள் ஏதும் சொல்ல மாட்டார்.

பெண்கள் உறையும் இடத்திற்குள்ளேயும் புக மாட்டார்.

ஆதலால் நீயும் இத்தகைய செயல்களைச் செய்யாமல் விட்டு விடுங்கள்
என்கிறார் இப்பாடலாசிரியர்..

"எடுத்திசையார் இல்லம் புகாஅ விடல்" என்பதற்கு வாருமென்று
அன்பாக அழையாத மனையிடத்துப் புகுதலொழிக என்றுரைத்தலுமாம்.

அட்டில் - அடு + இல்.

நடுக்கற்ற காட்சியவர் - கலக்கமற்ற மெய்யறிவினையுடையவர்கள்,

உரல்களத்து நோக்கார் - மகளிர் உரலில் ஒன்றையிட்டுக் குற்றிக்
கொண்டிருக்கும் பொழுது அவர்களைப் பாரார்;

அட்டில் எடுத்து இசையார் - சமையலறையில் புகுந்து தமது கருத்தை
எடுத்துரையார்;

பெண்டிர்கள் மேவும் இல்லம்புகார் = பெண்டிர் தனித்துறையும்
இல்லத்துட்புகார்..

ஆதலால், மேலே கூறிய இடங்களில் நோக்குதலும், உரையாடலும்,
புகுதலும் தவிர்க்க வேண்டும்.

'மேலும்' என்பது மேவும் என்று இருத்தல் வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Sep-14, 2:12 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 144

மேலே