ஆறறிவு அஃறிணைகள்
மனிதனாகப் பிறந்தால்
பல இன்னல்கள் வரும்
அதை புத்தியால் கையாள
வேண்டும் என்றுதான்
இறைவன் ஆறறிவு கொடுத்தான்
மனிதனுக்கு...!!!!
ஆனால் மனிதனோ
மிருகத்தையே மிஞ்சி
விட்டான் அடவாடித்
தனத்தில்...!!!!
குரங்கில் இருந்து வந்த
குணத்தை அவன் சில
சந்தப்பங்களில் வெளிப்
படையாக காட்டியே தற்
பெருமை கொள்கின்றான்...!!!
பொறுமையை இழக்கின்றான்
சிறுமைத் தனமாக நடக்கின்றான்
புத்திக்கும் யுத்திக்கும் விடுதலை
கொடுத்து கத்திக்கு வேலை
கொடுக்கின்றான்....!!!!
ஆசையாக நெருங்குகையில்
அழகாய் குழைகின்றான்
அன்பாக பழகும் போது
பக்குவமாக நடிக்கின்றான்
இரண்டையும் இழக்கின்றான்
மனித தன்மையை மறந்து
கொடுமைக் காரனாக
மாறுகின்றான்....!!!!
எந்த மிருகமும் மறைந்து
நின்று தன் இனத்தையே
தாக்குவது இல்லை மனிதன்
மட்டுமே அதில் கை தேர்ந்தவன்....!!!
காதல் கடிதம் கொடுக்கிறான்
வாங்க மறுத்தால் திராவகம்
வீசுகின்றான்...!!!!
தனி அறைக்கு அழைக்கின்றான்
மறுத்தால் கடத்திக் கொண்டு
நாசம் பண்ணுகின்றான்...!!!
ஒரு தலையாக காதலிக்கிறான்
விருப்பம் மறுக்கப்படும் பட்சத்தில்
குடும்பத்தையே வெட்டிச்
சாய்க்கின்றான்....!!!!
ஒரு பெண் வெறுப்பு விருப்புக்
கூறும் உரிமையும் பறிக்கப்
பட்டு பயந்த வண்ணமே வீதியில்
உலாவ வேண்டிய நிலைமை
பெண்ணுக்கு....!!!
பெண் வயிற்றிலே பிறந்து
தாய்ப் பால் சுவைத்து
பெண்ணோடுதான் தன்
வாழ்க்கை இன்பம் என்று
அறிந்தும் ஏன் சில ஆண்
மனம் கல்லாய் மாறியது
அறியா விடை புரியாப் புதிர்
ஆண்களைப் பற்றி ஆண்களே
கூறமுடியா நிலை...!!!!