ஆனந்தம்

ஆனந்தம்

இரண்டாண்டு நல்ல மழை
இல்லாமல் போனது
இயற்கைக்கு நாம் செய்யும்
கொடுமைக்குத் தண்டனை

ஆறுபருவமும் ஒன்றாகிப் போனதால்
கோடை வெயில் தொடர்கதை ஆனது.
எதிர்பாரா நேரத்தில்
பலத்த மழையின்று
கொட்டித் தீர்த்தது.

வெள்ளம் வழிந்தோடும்
கொள்ளை அழகை
வெகுநாட்கள் ஆனபின்னே
கண்டதில் ஆனந்தம்.


இனியேனும் திருந்துவோம்
இயகையைப் பேணுவோம்
வருங்கால சந்ததிகள்
வளமாக வாழ்ந்திட
அழிவுக் கூலியின்றி
சேதாரமும் இல்லாமல்
அவர்களிடம் ஒப்படைப்போம்
நாம்வாழும் இவ்வுலகை.


15-09-2014

எழுதியவர் : மலர் (15-Sep-14, 9:28 pm)
Tanglish : aanantham
பார்வை : 115

மேலே