மஞ்சப்பை

முன்பெல்லாம் என் வருகைதான்
இந்த மண்ணில்...
சுபகாரியங்களில் என் பங்கு அலாதியானது
என்னை கொண்டுதான் எந்த வேலையும் செய்வர்...
இன்று
என்னை சுமந்து சென்றாலே கேவலம்
என்கிறது சமூகம்...
அவர்கள் வைத்திருப்பவனால் பின்நாளில்
ஆபத்து என்று அறிந்திராதவர்களாய்!!....
-மூ.முத்துச்செல்வி