பனித்துளி

கிழக்கில் சூரியன்ஒளி வளர்க்க
கிழோர்க்கெல்லாம் வழி பிறக்க
மேல்மேகம் தெளிக்கும் சிறுதுளியே
இவ்வுயிர் துளி எனும் பனித்துளி..!

புற்களுக்கு புத்துயிர் தரும்..
பூக்களுக்கு புதுமணம்தரும்..
கற்களுக்கு பல்நிறம் தரும்..
பாக்களுக்கு நல்வரி தரும்..

சிலந்தி கூட்டிற்கு ஒட்டடை அடித்திடும்
சிற்றரும்புக்கு சிற்றுண்டி அளித்திடும்
பட்டுப்பூச்சியின் பட்டினை இரசித்திடும்
அட்டைப்புழுவின் அன்பினில் திளைத்திடும்

பச்சை இலைகளுடனே பல்லாங்குழி ஆடியே
பறவைகள் கூட்டத்தின் ஒலிகளை நாடியே
பரவிவரும் காற்றினில் பலஇசை பாடியே
காத்திருக்கும் தன் காதலனை தேடியே

கதிர்களின் அணிவகுப்புடன்
காட்சி தந்திடுவான் காதலன் அங்கே..!
காதலனை கண்ட இன்பத்தில்
காற்றினில் கரைந்திடுவாள் மெல்ல இங்கே..!

எழுதியவர் : ச.ஷர்மா (16-Sep-14, 11:03 am)
Tanglish : panithuli
பார்வை : 448

மேலே