சூரியகுல கர்வ காவியம்

சூரியகுல கர்வ காவியம்
========================

சிறைப்பிடிக்கும் கர்வம் அல்ல
என் ஆண்கர்வம் ,,
வந்துபோவோர் மிதிப்பதற்கு
என் நேர்மை ஒன்றும்
அசுர கர்வ காவியம் அல்ல
அது சூரியகுல கர்வ காவியம்

அச்சம் தவிர் பைங்கிளி
கந்தர்வம்பூண்டு
உன் பெண்மையை
பறித்து விடப்போவதில்லை நான்
ஏன் என்றால்
உன்னிடம் அப்பெண்மையை
இன்றுவரை உணர்ந்ததுமில்லை நான்

நேர்மை மிதித்தவர்
பார்வையின் பாதத்திற்கும்
மலர்நிறைந்த பாதையானேன் ,,
வழிப்பறிக் கொள்ளையல்ல அன்பு
வாரிக்கொடுப்பதே அன்பு ,,
அளவிட்டு மதிப்பிட்டுத் திரிவோருக்கு
என்றும் உகுப்படா அவ் அன்பு ,,
ஆட்டந்தீரியவுடன் அதுவும்
விலங்கெனவே கரம் சூழும்
அவரவர் தோன்றலுக்கு

மூன்றாம்பிறையொளியின் சாட்சியாக
பறிகொடுத்தேன்
என்னகத்தை அன்று
இருள்சூழ்க்குகையொன்றில்
அஸ்தமனமாக்கப்படுகிறது
யாரோ சிலரால் அதே அன்பு இன்று

அது எனக்கான பௌர்ணமி என்று
நெருங்கியபோதும்
தீயென வார்த்தைகளால்
வாட்டியபோதும்
உள்ளில் வாழ்ந்த காலம்
இன்று காணவில்லை

அன்பினை இடைபோட்டு பார்த்தாயோ
இல்லை மனிதர்களை
இடைபோட்டு பார்த்தாயோ ,,
உன்னால் வாங்க முடியா என் அன்பு
இன்று உன்னுள்
தோல்வியின் இழையில்

மஞ்சு விலகும் காலம் தூரமில்லை
நிலவின் களங்கமோ நிரந்தரமில்லை
பழிகளை வெல்லும் ஓர்நாள் என் அன்பு ,,

ஆம் எய்த பகழிகளை வெல்லும்
ஓர்நாள் என் அன்பு
உனக்கான இடம்
அன்று இருப்பதில்லை

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (16-Sep-14, 4:33 am)
பார்வை : 52

மேலே