எழுத மறுக்கும் எழுத்துக்கள்-------அஹமது அலி------
சிந்தனையின் தடங்களை
---சீரிய தடயங்களாக
---உருமாற்ற மறுக்கின்றன
---சூழ்நிலைகள்!
ஆறுதல் சொல்லவும்
---அச்சப்பட்டு
---அருகே வரத் தயங்குகின்றன
---வாக்கியங்கள்!
தேற்ற முயன்று
---தோற்றுச் சலித்து
---சோர்ந்து போகின்றன
---வார்த்தைகள்!
தோற்றாலும்
---தோல்வியிடம்
---மல்லுக்கு நிற்கின்றன
---முயற்சிகள்!
புழுங்கிப் புதையும்
---நினைவுகளுக்கு
---புத்துயிர் தருகின்றது
---மொழி!
மொழியோடு மொழிந்து
---வலியோடு வலிந்து
---பிரசவிக்கின்றன
---எழுத்துக்கள்!
அர்த்தங்களை
---அறிமுகம் செய்யாமல்
---புரிதலுக்கான
---ஒப்பந்தமிடுகின்றன!
புரியாத ஒப்பந்தமெனினும்
---ஒப்புக் கொள்ள
---பக்குவப்படுகின்றது
---மனம்!
ஒருவாறு எழுதிவிட்ட
---ஒப்பந்தப் பிரதியை
----படித்த பின் வெற்றியோடு
----அடங்குகிறது ஆசை!