சாலை விபத்து
உறை இரத்தங்களும்
சதைத் துணுக்குகளும்
வாகனச் சிதைவுகளும்
உயிர்காக்கும் ஊர்திகளும்
காவல் வாகனங்களும்-சாலை
மறியல்களும் ஆர்ப்பாட்டங்களுமாய்
மக்கள் கூட்டங்களும்-சகஜ
நிலைக்குத் திரும்புகின்றனர்...
மீண்டும் ஒரு-சாலை
விபத்து நேரும்வரை.
-மா.உ.ஞானசூரி.

