மனைவி

அவள் சிரித்தால்
நானும் சிரிக்கிறேன்...

அவள் அழுதால்
நானும் அழுகிறேன்...

அவள் கோபப்பட்டால்
நானும் கோபமாகிறேன்...

அவள் வருந்தினால்
நானும் வருந்துகிறேன்...

முகம் பார்க்கும்
கண்ணாடிபோல் பிரதிபலிக்கிறன
அவளுக்கான
என் முகம்!

ஒவ்வொரு கணவனின்-மறு
பிம்பமே மனைவி!
இது புரியாமல்-ஏனோ
அலை மோதுகின்றனர்
நீதிமன்றங்களில்.

-மா.உ.ஞானசூரி.

எழுதியவர் : மா.உ.ஞானசூரி (16-Sep-14, 10:39 pm)
Tanglish : manaivi
பார்வை : 132

மேலே