பெரியாருக்கு வாழ்த்து

ஈ.வே.ரா. பெரியாருக்கு பிறந்தநாளான இன்று அவருக்கு நான் சமர்பிக்கும் வஞ்சி விருத்தம் !

ஆத்திகம் நாத்திகம் என்றெல்லாம்
மூத்தவர் போட்டனர் நாடகங்கள்
கூத்துக ளுக்கிவன் நாயகன்தான்
நாத்திகம் பேசிடும் நல்லவந்தான் !

காரிருள் தன்னிலி ருந்தோரும்
நேரிய நல்வழி பற்றிடவே
கூரிய சிந்தனை ஒன்றதனால்
பாரினில் பேரிடர் துடைத்தவந்தான் !

ஆரமிர் தாய்த்தமிழ் கட்டுரைகள்
ஊரதும் போற்றிடும் சொற்பொழிவு
நீரவர் ஏத்திடும் நற்குணங்கள்
பேரறி வாளனி வன்புகழே !

தாயகம் கண்டதோர் நன்மனிதன்
தேயமும் வாழ்த்திடும் நல்மனதோன்
தூயதோர் நல்லுளம் கொண்டவன்தான்
தீயன அழித்திடும் தீப்பொறிதான் !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (17-Sep-14, 5:19 pm)
பார்வை : 135

மேலே