சூரிய ஒளி தன் அபூர்வ கிரணங்களோடு விரைந்து வரும்

எங்கும் இருள், ஒரே இருள்,
நிலவும் இல்லை, ஒளியும் இல்லை,
நட்சத்திரம் இல்லா வானம்,
காற்று வீசுகிறது, அலைகள் வந்து மோதுகின்றன,
ஒற்றை மின்மினிப் பூச்சி பறந்து செல்கிறது!

இரவின் இருளில் என்னை விட்டு
விரைந்து மின்மினிப் பூச்சி பறந்து மறைந்தது;
சூரிய ஒளி தன் அபூர்வ கிரணங்களோடு
விரைந்து வரும் என்பதை அந்த மின்மினி,
சிறு மின்மினி எனக்கு உணர்த்திச் சென்றது!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Sep-14, 2:42 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 96

மேலே