யார் காரணம்
என்னை விட்டு போகாதே என்றவன்
இன்று என்னை விட்டு போய்விட்டான்
இதற்கு யார் காரணம்?
கைகளின் சிறு கிறளுக்கு
அவன் நெஞ்சம் கிழிந்தது என்றவன்
இன்று விழிகளில் தீப்பொறி பட்டும் விசாரிக்கவில்லை
இதற்கு யார் காரணம்?
ஒரு மணி நேரம் பேசினவன்
இன்று சில நிமிடத்திற்கே காது வலிக்கிறது என்கிறான்
இதற்கு யார் காரணம்?
தானாக கை பிடித்து நடத்தி சென்றவன்
இன்று அவன் மீது கை பட்டால் கூட உதறி செல்கிறான்
இதற்கு யார் காரணம்?
சற்றும் வாய் ஓயாதவன்
இன்று மௌனத்திற்கும் மட்டும் சொந்தக்காரனாய் இருக்கிறான்
இதற்கு யார் காரணம்?
எப்போதாவது நேரம் கிடைக்காத சந்திப்பதற்கு என்றவன்
இன்று பல முறை வாய்ப்பு கிடைத்தும் முடியாது என்கிறான்
இதற்கு யார் காரணம்?
நீ தான் காரணம் என்கிறான் அவன்...
யார் அவன்?
ஒரே வானத்திற்கு ஒரே நிலவாய் இருந்தவன்
ஒற்றை ரோஜாவுக்கு மட்டும் நறுமணம் கொடுத்தவன்
ஒரே ஒரு சிற்பிக்காய் கடலில் மிதந்த ஒரு முத்து
அவளால் கிழிக்க படாத ஒரே ஒரு காகிதம்
ஒரே ஒரு நட்பு
ஒரே ஒரு அவன்...