Appunay - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Appunay |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 14-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 62 |
புள்ளி | : 16 |
நட்பு என்னும் கயிற்றில் ஆடிய
கால வரையின்றி பரிமாறி கொள்ளப்பட்ட அன்பு...
உண்மையான அன்பிற்கு
எந்த உறவு முறையும் அவசியம் இல்லை
அது நட்பாயினும் அவசியம் இல்லை...
என் கண்ணீரில் குளிர் காய்கிறான்
என் இதயத்தில் கோப அம்புகளை எய்கிறான்
என் வார்த்தைகளை அவமதிக்கிறான்
என் அன்பை கொச்சை படுத்துகிறான்
என் உரிமை செயலை ஏளன படுத்துகிறான்
என்னையே வெறுக்கிறான்
இதனால்அவன் எனக்கு எதிரி இல்லை
இதனால் தான் அவன் எனக்கு நெருங்கிய நண்பன்
கொடுத்த அன்பை திரும்ப பெற்று கொள்வது அல்ல நட்பு
வெறுப்பு கிடைத்தாலும்
மேலும் அதிகமாய் அன்பை கொடுப்பது தான் உண்மையான நட்பு
அவனுக்கே தெரியாமல் ஒரு பொருளை திருடிவிட்டான்
தற்போது அந்த பொருளை யாருக்கும் தெரியாமல்
அதே இடத்தில சேர்க்க நினைக்கிறான்
அந்த பொருள்,
வெறும் மையாய் அவனோடு இருக்கவில்லை
முற்கள் மேல் தடவிய மையாய் அவனோடு இருந்தது
இப்போது அவனே நினைத்தாலும்
அவனால் தொலைக்க முடியாது!
நண்பன் தவறு செய்யும் போது கண்டிக்காதவன் நல்ல நண்பனா?
திருமணத்திற்கு முன் தாய்மை அடைந்தேன்
தோழன் ஒருவன் அம்மா என்று அழைத்ததால்
இந்த அழகான வார்த்தையை என் கரு
எப்படி அழைக்கும் என்பதை
முன்னதாய் ஒத்திகை பார்ப்பது போல் இருந்தது
நண்பர்கள் தினம் மற்றும் இல்லை அவனால்
அன்னையர் தினத்திற்கும் வாழ்த்துகள் பெற்றேன்
யாரேனும் அவனை குறை கூரினால்
ஒரு அன்னையை போல்
பாசத்தை விட கோபத்தை காட்டியது உண்டு
சில தவறை என்னிடம் மறைப்பான்
ஏன் என்று வினாவினால்
அம்மாவிடம் சிலவற்றை மறைக்கத்தான் வேண்டும் என்பான்
எந்த பெண்ணும் பெற்ற தாயிக்கு ஈடு இல்லை
அந்த நிலையில் என்னை நிறுத்தியதற்கு
என் தோழனுக்கு நன்றி!
பிரிவு,
மிக வலியான ஒன்று தான் நினைத்தேன்
பிரிந்தவன் கல் நெஞ்சம் உடையவன்
என்று கண்டிந்து கொண்டேன்
ஆனால் இப்போது தான் தெரிகிறது
பிரிவு எத்தனை சுகம் என்று
சிறிது கூட ஓயாமல் அவன் நினைவை
கொண்டாடி கொண்டிருக்கும் மனம்,
கைபேசியின் அழைப்பு ஒலி கேட்கும் போது எல்லாம்
பிரிந்தவன் ஒரு வேளை அழைக்கிறானோ
என்கிற ஆவலில் அதிகம் துடிக்கும் இதயம்,
எதிரில் வர வேண்டும்
நேரில் காண வேண்டும்
என்கிற பேராசை உள்ளத்தில் இருந்தாலும்
பிரிந்தவன் எதிரில் வரும் போது
மௌன பூக்களின் வாசத்தை சிந்தி செல்கிறேன்
நிறைந்த வானத்தில் நிலவாய் தெரிகிறான்
நூறு பேர் இருந்தாலும் பிரிந்தவனையும்
அவன் செய்யும் செயலையும் த
என்னை விட்டு போகாதே என்றவன்
இன்று என்னை விட்டு போய்விட்டான்
இதற்கு யார் காரணம்?
கைகளின் சிறு கிறளுக்கு
அவன் நெஞ்சம் கிழிந்தது என்றவன்
இன்று விழிகளில் தீப்பொறி பட்டும் விசாரிக்கவில்லை
இதற்கு யார் காரணம்?
ஒரு மணி நேரம் பேசினவன்
இன்று சில நிமிடத்திற்கே காது வலிக்கிறது என்கிறான்
இதற்கு யார் காரணம்?
தானாக கை பிடித்து நடத்தி சென்றவன்
இன்று அவன் மீது கை பட்டால் கூட உதறி செல்கிறான்
இதற்கு யார் காரணம்?
சற்றும் வாய் ஓயாதவன்
இன்று மௌனத்திற்கும் மட்டும் சொந்தக்காரனாய் இருக்கிறான்
இதற்கு யார் காரணம்?
எப்போதாவது நேரம் கிடைக்காத சந்திப்பதற்கு என்றவன்
இன்று பல முறை வாய்ப்பு கிடை
அனைத்து கதவுகளும் மூடப்பட்டும்
ஏதாவது ஒரு கதவு மெல்ல திறக்காதா
என ஏங்கினேனே அன்றி
எப்போதும் திறந்த வாசலாய்
நிற்கும் உன்னை மறந்து போனேன்
இப்போது உன்னண்டை வந்தடைந்தேன்
ஏற்று கொள்வாயா?
என்னிடம் நீ சேரவே அனைத்து கதவுகளையும் அடைத்தேன் உயிரே!
காதல் முதல் கல்லறை வரை
நீ தான் என் முதல் காதலி!