காதலனின் விடை
அனைத்து கதவுகளும் மூடப்பட்டும்
ஏதாவது ஒரு கதவு மெல்ல திறக்காதா
என ஏங்கினேனே அன்றி
எப்போதும் திறந்த வாசலாய்
நிற்கும் உன்னை மறந்து போனேன்
இப்போது உன்னண்டை வந்தடைந்தேன்
ஏற்று கொள்வாயா?
என்னிடம் நீ சேரவே அனைத்து கதவுகளையும் அடைத்தேன் உயிரே!