தரை தட்டிய ஓடங்கள்
அறிவு இருந்தும் ஆற்றல் இருந்தும்
அடைய வில்லை இலக்கை
அழகு இருந்தும் பண்பு இருந்தும்
அமைய வில்லை வாழ்க்கை
குரல் இருந்தும் இனிமை இருந்தும்
வாய்ப்பு இல்லாது வருத்தம்
வரவு இருந்தும் வரம்பில்லா சொத்திருந்தும்
வாரிசு இல்லாது துன்பம்
எண்ணங்கள் ஓய்ந்தும் எதிர்நீச்சல் இழந்தும்
எதிர்பார்ப்பு எமனின் வருகைக்கு!