பல்லாங்குழி நாடகம்

உன் பார்வையில் இருந்து புறப்படும் மலர்
அம்புகள் என் இதயத்தை துளைக்கின்றன

அதிலிருந்து வரும் வலிகளை எதிர்கொள்ள
தெரியவில்லை ஏவியது நீயாக இருப்பதால்

வலிகளும் ஆனந்தமாய் தோனுதடி இந்த
சுகங்கள் இத்தனை நாள் எங்கிருந்தன எனக்குள்!!!

உன் இரு வண்டுகள் எனை நோக்கும் நொடியில்
எனக்குள் மதுக் குடங்கள் ஊற்றெடுக்க தொடங்குதடி

அள்ளி பருக அழைக்கின்றேன் என் மஞ்சத்தை
மெத்தையாக்கி காத்திருக்கிறேன் அன்பே உன்

பல்லாங்குழி நாடகத்தை அரங்கேற்று இப்பொழுதே...!!!
.
ப்ரியமுடன்...
லெட்சுமிநாராயணன்

எழுதியவர் : லெட்சுமி நாராயணன் (18-Aug-14, 11:29 pm)
பார்வை : 118

மேலே