யார் அவன்
என் கண்ணீரில் குளிர் காய்கிறான்
என் இதயத்தில் கோப அம்புகளை எய்கிறான்
என் வார்த்தைகளை அவமதிக்கிறான்
என் அன்பை கொச்சை படுத்துகிறான்
என் உரிமை செயலை ஏளன படுத்துகிறான்
என்னையே வெறுக்கிறான்
இதனால்அவன் எனக்கு எதிரி இல்லை
இதனால் தான் அவன் எனக்கு நெருங்கிய நண்பன்
கொடுத்த அன்பை திரும்ப பெற்று கொள்வது அல்ல நட்பு
வெறுப்பு கிடைத்தாலும்
மேலும் அதிகமாய் அன்பை கொடுப்பது தான் உண்மையான நட்பு