திருடன்
அவனுக்கே தெரியாமல் ஒரு பொருளை திருடிவிட்டான்
தற்போது அந்த பொருளை யாருக்கும் தெரியாமல்
அதே இடத்தில சேர்க்க நினைக்கிறான்
அந்த பொருள்,
வெறும் மையாய் அவனோடு இருக்கவில்லை
முற்கள் மேல் தடவிய மையாய் அவனோடு இருந்தது
இப்போது அவனே நினைத்தாலும்
அவனால் தொலைக்க முடியாது!