பிரிவு
பிரிவு,
மிக வலியான ஒன்று தான் நினைத்தேன்
பிரிந்தவன் கல் நெஞ்சம் உடையவன்
என்று கண்டிந்து கொண்டேன்
ஆனால் இப்போது தான் தெரிகிறது
பிரிவு எத்தனை சுகம் என்று
சிறிது கூட ஓயாமல் அவன் நினைவை
கொண்டாடி கொண்டிருக்கும் மனம்,
கைபேசியின் அழைப்பு ஒலி கேட்கும் போது எல்லாம்
பிரிந்தவன் ஒரு வேளை அழைக்கிறானோ
என்கிற ஆவலில் அதிகம் துடிக்கும் இதயம்,
எதிரில் வர வேண்டும்
நேரில் காண வேண்டும்
என்கிற பேராசை உள்ளத்தில் இருந்தாலும்
பிரிந்தவன் எதிரில் வரும் போது
மௌன பூக்களின் வாசத்தை சிந்தி செல்கிறேன்
நிறைந்த வானத்தில் நிலவாய் தெரிகிறான்
நூறு பேர் இருந்தாலும் பிரிந்தவனையும்
அவன் செய்யும் செயலையும் தூரத்தில்
நின்று காண்பதும்,
பிரிந்தவன் பார்வை என் பக்கம் விழாத
என்ற ஏக்கத்தில் வாடும் போது அவன் தலை சற்று
நான் இருக்கும் திசை திரும்பினால்
அவனை பார்க்காதது போல் தலையை குனிந்து கொள்வதும்,
ஆ....
இன்னும் பல....