நீ எந்தன் பொக்கிஷம்
நீ தொலைந்து போவென
சொல்லிய போது..
கால்(மனம்)வலிக்க
கடந்து போனேன்..
இன்று...
இளைப்பாறுமிடம்
கண்ட போதும்..
உன் அன்பை மட்டும்
மீண்டும் வந்து
உன்னில் தேட தோணுதே...
நீ துரத்த நான் அழுது..
மனதில் மீண்டும்
சாக தோணுதே..!
தொலைந்த நாளில்
துலங்கும் நினைவு
என்றும் என்னில்...
உனதே..உனதே..!!