பிள்ளையாகிய தோழன்

திருமணத்திற்கு முன் தாய்மை அடைந்தேன்
தோழன் ஒருவன் அம்மா என்று அழைத்ததால்
இந்த அழகான வார்த்தையை என் கரு
எப்படி அழைக்கும் என்பதை
முன்னதாய் ஒத்திகை பார்ப்பது போல் இருந்தது
நண்பர்கள் தினம் மற்றும் இல்லை அவனால்
அன்னையர் தினத்திற்கும் வாழ்த்துகள் பெற்றேன்
யாரேனும் அவனை குறை கூரினால்
ஒரு அன்னையை போல்
பாசத்தை விட கோபத்தை காட்டியது உண்டு
சில தவறை என்னிடம் மறைப்பான்
ஏன் என்று வினாவினால்
அம்மாவிடம் சிலவற்றை மறைக்கத்தான் வேண்டும் என்பான்
எந்த பெண்ணும் பெற்ற தாயிக்கு ஈடு இல்லை
அந்த நிலையில் என்னை நிறுத்தியதற்கு
என் தோழனுக்கு நன்றி!

எழுதியவர் : Bharathi (25-Aug-14, 10:14 pm)
பார்வை : 115

மேலே