இப்படிக்குக் காதல்-மணியன்

வானம் முழுவதும்
வற்றி விட்டது. . .
வட்டநிலா அன்றி
வேறேதும் தெரியவில்லையா. . . .

தென்றல் வந்து
தழுவும் போதும்
தேகம் முழுதும்
தகித்துச் சுடுகிறதா . . . .

மொட்டு விரிந்தும்
மணம் சொறிந்தும்
வாசம் உனக்கு
வந்து சேரவில்லையா . . . .

தூங்க நினைத்து
துடிக்கும் இமைகள். . .
பாசாங்கு செய்யும்
பசப்பு விழிகள். . . . . .

வார்த்தை பிறந்தும்
வரிகள் மலர்ந்தும்
கவிதை வாராமல்
கபடி ஆடுகிறதா . . . . .

இதயம் கனத்து
இறங்கித் தவித்து
எங்கோ பறந்து
ஏளனம் செய்கிறதா. . . .

இன்னும் உனக்கு
இருக்குதோ சந்தேகம்
இதோ நான்தான்
இப்படிக்குக் காதல் . . . . .


*-*-*-* *-*-*-*-* *-*-*-*

எழுதியவர் : மல்லி மணியன் (26-Aug-14, 12:27 am)
பார்வை : 118

மேலே