அன்றும் இன்றும்--நண்பன்டா

ஆலமரங்கள்
புத்தர் அமர்ந்ததால்
‘அரச’மரமானது பழைய கதை..
அன்றில் ஒன்று
முட்செடியில் அமர்ந்ததும்
முருங்கையாய்ப் பூத்தது
இது இன்றைய நிலை!

உப்பிருந்தும்
ஏழையின் கண்ணீரைக்
குப்பையில் போட்டது
பழைய கதை!
உச்சி முகந்து
உருசித்துக் குடிப்பது
இன்றைய நிலை!

அழகிய கவிதையில்
இலக்கணப் பிழைபார்த்தது
பழைய கதை!
அழகிலே மயங்கி
இலக்கணம் மறப்பது
இன்றைய நிலை!

விடியவில்லை
ஊர்ஜிதப்படுத்தியது
காலைச் செய்தி
இது பழைய கதை!
விடிந்தே விட்டது
பூத்தது மலரென
வியந்தே போனது
இன்றைய நிலை!
===== =====

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (19-Sep-14, 7:18 pm)
பார்வை : 64

மேலே