தனி உலகம்
என் எண்ணத்தில் உருவான சிலையானது
என் கண்ணுக்கு மட்டுமே புலனானது
என் மனதில் தீட்டிய ஓவியமானது
என் இரசனைக்கு மட்டுமே உரித்தானது
என் கருத்தில் விளைந்த கவியானது
என் நுகர்வுக்கு மட்டுமே என்றானது
என் இதயத்தின் ஒலி தந்த இசையானது
என் செவிக்கு மட்டுமே வசமானது
எனக்கான சிற்சில தனித்தனி நிகழ்வானது
தன்னாலே நடப்பது உலக இயல்பானது