எழுந்து வா
பெருக்கோ ஈட்டலிலே
சுருக்கோ ஈகையிலே
செருக்கோ இல்லாத
சிறப்புகளில்;
முறுக்கோ மீசைகளில்
குறுக்கோ ஆண்மைகளில்
சறுக்கோ வருமெங்கள்
சந்ததியில்;
செருப்போ நம்தலையில்
சிரிப்போ பிறர்வாயில்
நெருப்பே கைகளிலே
நீ.எடுப்பாய்!
வெறுப்போ இவ்வாழ்க்கை
விரித்தான் கடவுளெனில்
எரிப்போம் மதங்களினை
எழுந்துவா!
=== === ===