காதல் செய்யுங்கள்

சுதந்திரமாய்
காதல் செய்யுங்கள்!
சுத்தமாய்
காதல் செய்யுங்கள்!

ஆண் பெண்ணென
ஆண்டவன் படைத்தான்
இரு சாதிகளை
இப் புவிமேலே-சுதந்திரமாய்
காதல் செய்யவே!

காதலைக் காரணமாக்கி
கலவரங்கள் செய்து-பூமித்தாயின்
கர்ப்பத்தைக் கலைத்து
கயவர்கள் ஆகிடாதீர்!

மண்ணவளை
விண்ணவன்
காதல் செய்வதால்-தன்
காதலிக்குத் தேவையான
வளங்களைக் கொடுத்து-தானும்
உற்றதுணையாய் இருக்கின்றான்.

காதலித்து
கைப்பிடிக்கும் முன்பே
கர்ப்பவதி ஆ(க்)காதீர்கள்-இத்
தேசத்தில்
கடவுளின் குழந்தைகள்
எண்ணிக்கையை அதிகரிக்காதீர்!

காதலர்கள் இறந்தாலும்
காதல் அழிவதில்லை!-இவை
காலச் சுவடுகளில்
பதிந்த காவியங்கள்.

சில வடுக்களாகும்
மோகக் காதலால்-பாதிப்பாகுவது
காவியமாய் போற்றப்படும்
புனிதக் காதல்களும்தான்!

காதல் செய்வோரே
நிஜங்களுக்குள்
நிழல்கள் மறையலாம்!
நிழல்களுக்குள்
நிஜங்களை மறைக்காதீர்கள்!
போலிக் காதல்களால்
உண்மைக் காதல்களை
சீரழிக்காதீர்கள்.

சுதந்திரமாய்
காதல் செய்யுங்கள்!
சுத்தமாய்
காதல் செய்யுங்கள்!!

-மா.உ.ஞானசூரி

எழுதியவர் : மா.உ.ஞானசூரி (19-Sep-14, 8:58 pm)
சேர்த்தது : மா.உ.ஞானசூரி
Tanglish : kaadhal seiyungal
பார்வை : 68

மேலே