நீ முகம்துடைத்த உன் கைக்குட்டை

மழை பெய்து
ஒரு பூ
நனையலாம் !
ஆனால்
இங்கே,
வெயில் பெய்து
ஒரு பூ
நனைகிறதே !
என்ன விழிக்கிறாய் ?
உன்
வியர்வையைத்தான்
சொல்கிறேன் !
=====================
பட்டப்பகல் நேரப்
பனித்துளிகள்
எந்தப் பூவிலும்
சாத்தியமில்லை !
ஆனால்
பூவே
உன்னில் அது
சாத்தியம் !
=====================
வியர்க்கிறாய்
நீ !
வியக்கிறேன்
நான் !
=====================
வியர்வையில் நனைந்த
உன் ஆடைகளை
வெயிலில் காயப்போடு !
வெயிலாவது
கொஞ்சநேரம்
வாழ்ந்து கொள்ளட்டும் !
======================
உப்புக்கரிப்பதென்பது
வியர்வையின்
விதி !
ஆனால்
உனக்கு மட்டும்
அதை
இனிப்பாய் மாற்றியது
பிரம்மன் செய்த
சதி !
=====================
என்
கண்களின்
வறட்சி நோய்க்கு
அருமருந்து
உன் வியர்வைதான் !
=====================
நாசியாலஜியா
என்பது
உன் வியர்வை வாசம்
நுகர்ந்து விட்டு
வேறதையும்
நுகரமாட்டேன் என
நாசி
அடம்பிடிக்கும்
ஒரு நோய் ஆகும் !
=====================
உன்
கட்கத்து வாசனை
எனக்கு
ஒரு லாரி
கஞ்சா !
=====================
நீ முகம்துடைத்த
உன்
கைக்குட்டை கொடு !
பொய்யாகத்
தொலைத்துவிடுகிறேன் !
=====================
வெயிலில்
நடந்து வந்து
அப்பாடா என்று
பெருமூச்சு விடுகிறாய்
நீ !
அப்பாடா என்று
பெருமூச்சு விடுகிறது
வெயிலும் !
=====================
இறுக்கமாக
நீ
உடையணிந்தால்
என்
கண்களுக்கு
வியர்க்கிறதே !
=====================
அநேகமாக
சொர்க்கத்தின்
சந்தைகளில் கிடைக்கலாம்
உன்
வியர்வை வாசம்வீசும்
வாசனைத் திரவியங்கள் !
=====================
- கிருஷ்ண தேவன்
மனசாட்சி : கிருஷ்ண தேவா, வேதாளம் மறுபடி முருங்கை மரமா ?
கிருஷ்ண தேவன் : ஆம் விக்கிரமாதித்தரே ..........