அழைக்கிறேன் வருவாயா

மலர்த்தோட்டத்து
மல்லிகையே..!!!

ஒரே பார்வையில்
என்னை மயக்கிய
விழியே...!!!

உறவாக நான்
வரவோ..!!!

ஊரை அழைத்து
வரவோ...!!!

உள்ளே ஊறும்
காதலை சொல்லி
விடவோ...!!!

உன்னுடனே தங்கி
விடவோ...!!!

வேட்டைக்கு வந்த
நாட்டாமை என்னை
விழியாலே வலை
வீசிப் பிடித்த
பேரழகியே...!!!

ஒரு நொடியில்
என்னை மறந்து
உன்னை
நினைத்தேன்..!!!

ஓராயிரம் கற்பனையை
உள்ளே வளர்த்தேன்..!!

மாற்ற வேண்டும்
வெத்தலை பாக்கு
மறுப்புக் கூற மாட்டேன்
என்று நீயும் சொல்லு
வாக்கு...!!!

செல்வாக்கு
செழிப்போடு
வாழ்க்கை
கொடுக்கிறேன்
தெருவெல்லாம்
பார்க்கும் படி
உன்னை
அழைக்கிறேன்...!!!

உன் ஊமை விழி
மூடி உண்மை மொழி
பேசி உறுதியான பதில்
கூறும்...!!!!

ஊர் சென்று நான்
வரவே மலர்ந்தும்
மலராத மடி சாய்க்கவும்
தோள் சாயவும் வரும்
என் ஆசை மல்லிகையே...!!!

எழுதியவர் : தழிழ்த்தேனீ இ.சாந்தகலா (20-Sep-14, 1:19 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 68

மேலே