அம்மா உணவகம்
பாரதியே எங்கள் அம்மா உணவகத்தில் அமுதுண்ன வா ...!
-----------------------------------------------
கொடும்பசியால் வாடும் ஏழை
பரிதாப குரலில்
அம்மா தாயேவென அழைத்து யாசிப்பான் !
ஆயிரம் ஆண்டுகள் இவன் யாசிப்பது
இப்படிதான் இருந்தது !
இந்த ஏழையின் குரலை
இருபதாம் நூற்றாண்டுவரை
இறைவன் கேட்டாரோ இல்லையோ ?
இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில்
அம்மா கேட்டார் !
ஒரு ஏழையல்ல ஓராயிரம் ஏழைகள்
பசிபினியாற்ற
திறந்தார் அம்மா உணவகங்களை !
தமிழ்நாட்டில்
இப்போது
பசியால் ஒலிக்கும்
பரிதாப அம்மா ஒலி எங்கும் இல்லை !
பசியாறிய மகிழ்சியில்
அம்மா என்ற ஆனந்த குரல்தான்
அங்காங்கே கேட்கிறது !
தனியொரு மனிதனுக்கு
உணவில்லை யெனில்
இந்த ஜகத்தினை அழித்திடுவோம்
என்று பாடிய எங்கள் தமிழ்கவிபாரதி
இப்போது வாழ்ந்திருந்தால்
அம்மா உணவகத்தில்
அமுதுண்ட மகிழ்சியில்
ஆயிரம் கவி பாடியிருப்பாறோ ?