உன் முடிவினை பொறுத்து
என் அன்பே
அத்திப்பூ தோட்டத்தில்
அணுகுண்டு வீசாதே......!
தித்திக்கும் இதயத்தில்
அமிலத்தை பூசாதே......!
மலர்கின்ற ஆசையை
மௌனத்தால் பூட்டாதே .......!
மலர்கொண்ட பெண்மையே
மரணத்தை காட்டாதே .......!
விழி நீரில் நனைகிறேன்
உன் விரல் தந்து நிறுத்து .........!
என் வாழ்வின் விடியலோ ........!
உன் முடிவினை பொறுத்து .......!