தந்தையே உனக்காய்

..."" தந்தையே உனக்காய் ""...

காலம் எனக்கு தந்த பரிசு நீ
காற்றாய் மறைந்துவிட்டாய்
தாயெனக்கு மாரூட்டினாள் நீ
மாரோடேனை தாலாட்டினாய்
மகிழ்ச்சிக்கு குறைவில்லாது
கதைகள் பல சொல்லித்தந்து
கடந்த காலத்தை காட்சி தந்தாய்
விரல்பிடித்து நடக்க செய்தாய்
விளையாட்டு பொம்மையனாய்
ஊர் திருவிழா காலங்களில்
உன் தோளேற்றி ஏணியானாய்
வளர்ந்தேன் வாலிபமானேன்
தோழனாய் தோள்கொடுத்தாய்
வயோதிகமே ஆனாலும் உன்
வாஞ்சைமிக்க பாசம் மாறாதே
நேசத்தில் நீ நிலைத்திருந்தாய்
அக்கரை சேர்த்திட்ட உன்னை
அக்காறையாய் பார்க்குமுன்னே
எக்கரையிலோ இருந்து வந்த
காலனுனை கவர்ந்து சென்றான்
கனிவாய் கரையேற்றிய ஓடமே
எனை கண்ணீரில் தல்லாடவிட்டு
காற்றாய் நீ மறைந்துவிட்டாய்
மகனாய் உனக்கு நன்றி சொல்ல
என் மகனுக்கு உனைப்போலோரு
நல்லதொரு தந்தையாவேன்,,,,,
காலம் எனக்கு தந்த பரிசு நீ .....

இப்படிக்கு,,,,
என்றும் உன் அன்புமறவாத மக(ள்)ன் ,,,,

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன் (20-Sep-14, 12:01 pm)
Tanglish : thanthaiye unakkaai
பார்வை : 671

மேலே