விரலை விற்று கற்பனை கற்றேன் - இராஜ்குமார்
![](https://eluthu.com/images/loading.gif)
விரலை விற்று கற்பனை கற்றேன்
===============================
குளிராத விழிநீரில் கன்னம் நனைய
மின்விசிறி காற்றிலும் அயர்ந்தேன்
ஒழுகாத சுவரில் தலையும் உரச
மின்விளக்கு ஒளியிலும் இருண்டேன்
இதமான இதயத்தில் இன்பம் நிறைய
செழுமை அளித்து செல்கள் வளர்த்தேன்
அழியாத அணுக்களில் அன்பும் ஊற
கனவை பிடித்து பாசம் பதித்தேன்
இணையாத கரத்தில் கழுத்தும் சாய
இயற்கை வீசிய தென்றலை வெறுத்தேன்
ஊறாத வியர்வையில் தேகம் நனைய
விரலை விற்று கற்பனை கற்றேன்
கிழியாத தோலில் ரத்தம் உறைய
உணர்வை தைத்து காதல் வளர்த்தேன்
சிதையாத உன்மனதில் வெறுப்பும் குறைய
காதலை விட்டு வரிகளில் வாழ்ந்தேன்
-இராஜ்குமார்
நாள் : 9 - 7 - 2011