விடியும் வேளை-------நிஷா

சேவல் ஒன்று கூவுது;
செவ்வானம் சிதறுது;
செங்கமலம் விரியுது;
செந்தூரம் மலருது;
அழகுமுகம் தவழ
அதிகாலை இங்கே விடியுது.....

தென்றல் காற்று இசைக்குது;
தெம்மாங்கு பாடுது;
தேன்சிந்தும் மலர்களிலே
தேனமுதம் சிந்துது;
அழகுமுகம் தவழ
அதிகாலை இங்கே விடியுது.....

பச்சைப்பசேல் புல்வெளியில்
படுத்துறங்கிய பனித்துளிகள்
போகும் பாதை தேடுது
ஏனோ முகமும் வாடுது
அழகுமுகம் தவழ
அதிகாலை இங்கே விடியுது.....

தூக்கணாங்குருவி கூட்டில்
துருதுருனு ஒரு குருவி
துயில் கலைந்து விழிக்குது
சுதந்திரமாய் பறக்குது
அழகுமுகம் தவழ
அதிகாலை இங்கே விடியுது....

..................................நிஷா

எழுதியவர் : நிஷா (22-Sep-14, 10:02 pm)
பார்வை : 388

மேலே