மனதின் மொழி
பாட்டுப் பாடி ஆட வந்த
கூத்துக் கலைஞன் நான்
வாழ்த்துச் சொல்லிப் பாட வந்த
வீட்டுக் கவிஞன் நான் --உங்கள்
வீட்டுக் கவிஞன் நான்...
ஓடி வந்த பாதையிலே சுவடைப் பார்க்கிறேன்
பாத சுவடைப் பார்க்கிறேன் .....
கடந்து வந்த பாதைகளைத் திரும்பப் பார்க்கிறேன்
நான் திருத்தப் பார்க்கிறேன்..............
காதல் எனும் போதையிலே கலக்கப் பார்க்கிறேன்
அதற்க்கு நட்பை விடனும் என்பதால்
விலகிக் கொள்கிறேன் --நான்
விலகிக் கொள்கிறேன்.....
பாவை முகம் பார்த்ததினால்
பாவம் பல செய்துவிட்டேன்
பாவி நானும் திருந்திவிட்டேன் .....
காலை நேரப் பூக்களையும்
காதலித்து உணர்ந்து விட்டேன் ..............
வீட்டை விட்டு வெளியேறி --
வீதிகொரு சாதி காண்கிறேன் .........
நண்பன் எனும் பெயரில்
பல முகம் கண்டுவிட்டேன்
பனி மழையாய் நனைந்துவிட்டேன் ......
கல்லூரியில் சேர்ந்ததனால்
கவிதை பல எழுதி விட்டேன் .........
கிரிக்கெட் எனும் என் விருப்ப விளையாட்டில்
சாதனை பல புரிந்துவிட்டேன்.......
பறந்து திரியும் பறவைகளே
இறங்கி வாருங்கள் ....என் சோகப்
பாட்டைக் கேளுங்கள் ..........
விலங்கினங்களே எங்கள் வீட்டில்
விருந்தாளியாக வாருங்கள்
விருப்பமிருந்தால் எங்களிலே ஒருவராகுங்கள் ............
மனிதனை நானே வெறுத்துக் கொண்டேன்
மனதினை ஏனோ கெடுத்துக் கொண்டேன் ....
உலகின் அழகை ரசித்துவிட்டேன்
உறவில் நாளும் வளர்ந்து விட்டேன் .........
சோம்பித் திரிந்து வாழ்ந்து விட்டேன்
சோகம் பல கடந்து விட்டேன்...............
காடு மேடெல்லாம் சுற்றியதால்
கால்கள் ரெண்டும் தளர்ந்து விட்டன ........
சோதனைகள் பல கடந்து
சாதனை பல படைத்துவிட்டேன் ..........
வளர்ந்து வரும் என் வாழ்க்கை -எதையோ
தேடிச் செல்லும் என் கால்கள்
பாமரரின் சொற்கள் எல்லாம்
கேட்டு சொல்லும் என் காதுகள்
அனைத்தும் என்னிலே அருமையான செயலிலே .....
நட்பு என்னும் பாசம் மட்டும்
நம்பிக்கையாக நாளுமே ...........
தேடி அலைகிறேன் பாடிப் பறக்கிறேன்
கனவான கற்பனை வாழ்விலே .....
பிரிந்து வாழும் இதயங்களை
இணைக்கத் துடிக்கிறேன்
பிரிவில்லா சமுதாயம் படைக்க வருகிறேன் ......