புது வாழ்வு

என் வாழ்வும் ஒரு ஓடமாய்
பாவ நதியினில் ஓடியதே
பரிகாரி உம் பாசத்தால்
உம் பாதம் கரை சேர்ந்தேனே
ஓடிப் போன ஒநேசிமு நான்
என்னை
மாற்றினிரே
பயனுள்ளவனாய்
இனி
உமக்காக யுத்தம் செய்வேன்
நல்லவொரு
போர் வீரனாய்.
உம்மையே
நான் யாசிப்பேன்
உம்மையே
நான் நேசிப்பேன்
உம்மைப் பற்றியே
தினம் யோசிப்பேன்.
நன்றி